திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆங்கியம் பகுதியில் கடந்த மாதம் குன்று பகுதியில் உள்ள குகைகளில் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று இருவரை தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனத்துறையினர் சோதனை செய்ததில் சிறுத்தை கொல்லி மலை பகுதிக்கு சென்று விட்டதாகவும் அது நாமக்கல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அன்று திருச்சி மாவட்ட வனத்துறையினர் கூறினார் இதனால் பொதுமக்கள் சற்று அச்சத்தில் இருந்து விடுபட்டனர்.
உண்மையில் அது அன்று திருச்சி எல்லையைத் தாண்ட வில்லை என்பதுதான் உண்மை தற்போது மீண்டும் அதே பகுதியில் சிறுத்தை 2 குட்டிகளுடன் நடமாடுவதை அப்பகுதியை சேர்ந்த சிறுமி கமலி வயது 14 என்பவரும். பொதுமக்களும் பார்த்ததாக அச்சத்துடன் கூறிவருகின்றனர். மேலும் அதே பகுதியில் மயில் கோழி என பறவைகள் தாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது .இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன், காணப்பட்டு வருகின்றன. அதனால் மீண்டும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.