திருச்சி மாவட்டம் முசிறியில் இயங்கும் துறையூர் அமலாக்க பணியகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயசித்ரா, உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமை காவலர்கள் லோகநாதன் பிரசன்னா முதல் நிலைக் காவலர் முருகானந்தம் ஆகியோர் கொண்ட குழுவினர் வாழ்வேல் புத்தூர் சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு வந்த சிவப்பு நிற மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்தக் காரில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உடனடியாக இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய மத்திகிரியைச் சேர்ந்த ஆனந்த் குமார் ( 22 ), மஞ்சு ஸ்ரீ நகரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மற்றும் முனீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ( 22 ) ஆகிய மூவரையும் கைது செய்தனர் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் கடத்தி வந்த இரண்டு கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் ஆகும். காவல் ஆய்வாளர் பொறுப்பு ஜெயசித்ரா மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் தொடர்ந்து கஞ்சாவை கடத்தி வந்த மூவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..