தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய் சென்றார். அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்க்கவே இந்த பயணம் மேற்கொண்டதாக அரசு விளக்கமளித்திருந்தது. ஆனாலும், பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்து வந்தன.
இந்நிலையில், முதல்வரின் அடுத்தக்கட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளும் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளன. அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அந்நிய நேரடி முதலீடு 41 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது” என்றார்.