தமிழக திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி வேர் ஹவுஸ் குட்செட் சாலையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அயலக அணி மாவட்ட அமைப்பாளர் அடைக்கல ராஜா தலைமை தாங்கினார். பாலக்கரை பகுதி கழக செயலாளர் ராஜ் முகம்மது வரவேற்புரை ஆற்றினார். மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொருளாதார வல்லுநர் முனைவர் ஜெயரஞ்சன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அயலக அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழக திமுக கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்