உலகில் சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கும் அந்த நம்பிக்கையின் படி நடந்தால் வெற்றி கிடைக்கும். அது போலத்தான் சிலருக்கு சில எண்கள் ராசியாக இருக்கும். தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ராசியாக நம்பர் 7 எண்ணாக அமைந்துள்ளது. எப்படி என்றால் 133 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் இன்றைய தினம் 7ஆம் தேதி ‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’… என்று உச்சரித்து தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார், மேலும் அவர் உட்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.