பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62 வது குருபூஜை விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது திரு உருவச்சிலைகளுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *