தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் ஆறாவது கிராஸ் பின்புறத்தில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமில் இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கு டாக்டர் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார். இதேபோல் குழந்தையின்மை மகளிர்க்கு டாக்டர் கலைச்செல்வி ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார்.

சிறுநீரக நோய்களுக்கு டாக்டர் ராஜேஷ், எலும்பு மூட்டு நோய்களுக்கு டாக்டர் ராஜேஷ்குமார், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் மீனாட்சி மற்றும் மூளை நரம்பு நோய்களுக்கு டாக்டர் அருண் பிரசாத் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக குறைந்த செலவில் ஐவிஎப் சிகிச்சையும், இலவச எண்டோஸ்கோ சிகிச்சையும், சிடி ஸ்கேன் பரிசோதனைகளுக்கு 50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இசிஜி யுஎஸ்ஜி ஸ்கேன் சுகர் டெஸ்ட் முற்றிலுமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *