திருச்சி முன்னாள் எம்பியும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ்,வின்சென்ட் அடைக்கலராஜ், முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, ராஜா டேனியல் ராய், பிலால், திருவரங்கம் சேட்டு, சிவாஜி சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.