திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகன் கடந்த மே மாதம் யூடியூபில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பூ ஆகிய இருவரின் புகைப்படங்களை பயன்படுத்தி வீடியோ வெளியானது. இதுதொடர்பாக திருப்பனந்தாளை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஜூன் மாதம் திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் , ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதனையடுத்து இருந்து திருச்சி மத்திய சிறையிலிருந்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவரை மத்திய சிறை முன்பு அவரை வரவேற்றனர். துரைமுருகன் அளித்த பேட்டியில் “கருத்து சுதந்திரம் காக்க பட வேண்டும் எனக்காக குரல் கொடுத்த உலகத் தமிழர்களுக்கும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் , நாம் தமிழர் பொறுப்பாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எனது நன்றி.
இந்த 60 நாள் சிறை எனது பேச்சையோ, எழுத்தையோ, கருத்தையோ முடக்க முடியாது, அணிதிக்கு எதிரான,அடக்கு முறைக்கு எதிரான,பாலியல் வன்கொடுமைக்கு எதிரான, சாதிய இழிவுக்கு எதிரான எனது சாட்டை முன்பை விட பல மடங்கு அறிவு தளத்தில் இயங்கும். இந்த சிறையை எனக்கு வழங்கிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் , உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், கனிமொழி அவர்களுக்கு வழக்கு போட்ட அனைவருக்கும் என் நன்றி. இந்த சிறையில் நான் பல புத்தகங்களை படித்தேன். சிறை போராளிகளை செதுக்கும் பொறுக்கிகளை சிதைக்கும் சிறை என்னை செதுக்கி இருக்கிறது” என்றார்.