திங்கட்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக செயற்படாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இரண்டு வாரம் பொது முடக்கம் என்பதால் தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் திருச்சி புத்தூர் சிந்தாமணி வளாகத்தில் உள்ள எலைட் மதுபான கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக வாங்கி சென்றனர். பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்த நிலையில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. பெரிய அளவிலான பைகளுடனும், பெட்டிகளுடன் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.