தமிழக முழுவதும் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 18 வயது மேற்பட்டவர்கள் தடுப்பூசி சிறப்பு முகாமை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். முகாம் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 7 மணிவரை தொடர் நடைபெற உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் இம்முகாமில் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாநகர பகுதிகளில் இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உடையவர். இதில் நாலு லட்சத்தி பத்தாயிரம் பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதி இருக்கும் 3 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 136 இடங்களில் 20 ஆயிரம் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு திட்டமிட்டுள்ளது. விரைவில் பிஸியான அனைத்து நபர்களுக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இப்பணிகளில் மருத்துவர்கள் 20 மருத்துவர்கள், செவிலியர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு மாவட்ட பகுதியில் 435 இடங்களில் எழுபத்தி ஐயாயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது. இதுவரைக்கும் 23 லட்சத்து என்பதாயிரம் நபர்களுக்கு போடவேண்டும் இதுவரை 11 லட்சம் நபர்களுக்கு போடப்பட்டு உள்ளது. மீதம் உள்ள நபர்களுக்கு விரைவில் போடப்படும் என தெரிவித்தார்.