திருச்சி சௌராஸ்ட்டிரா தெரு பகுதியில் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை மற்றும் சதீஷ் அகாடமி பள்ளி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…. பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் தரமானதாக இல்லை என உடற்கல்வி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என கேட்டதற்கு…. சிவகங்கை மாவட்டத்தில் ரிவ்யூ மீட்டிங் நடந்த பொழுது அவர்கள் இந்த கோரிக்கைகளை துணை முதலமைச்சரிடம் வைத்துள்ளனர். அது தொடர்பாக ஆய்வு செய்து உபகரணங்கள் மாற்றி அமைக்கப்படும் எனக் கூறியுள்ளனர். மத்திய அரசு எப்படி எல்லாம் நிதியை நிறுத்தி வைத்துள்ளது என்பது உங்களுக்கு தெரியும் அதையும் கடந்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் நாங்கள் 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்கிறோம். முறையாக அதை பார்த்து வாங்கி அவர்கள் பயன்படுத்த வேண்டும்.

நானும் ஒரு பொருளை வாங்கினேன் என்றில்லாமல் அந்த பள்ளிக்கு என்ன விளையாட்டு உபகரணங்கள் தேவையோ எந்த விளையாட்டை அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்துகிறார்களோ அதற்கு ஏற்றார் போல் வாங்க வேண்டும் . இதுகுறித்து அனைத்து பள்ளி கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார். திமுக விஜய்க்கு தொல்லை தருவது கிடையாது , தேர்தல் ஆணையர் மூலமாக ஒரு உத்தரவு வரும்பொழுது அதற்கு பூத் அலுவலர்கள் வேலை பார்க்கின்றனர். இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சென்று விடுவர். தேர்தல் ஆணையம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பி எல் ஏ 2 போட்ட ஒரே இயக்கம் திமுக தான். எங்களுடன் யார் வேண்டுமானாலும் வரலாம் மக்களின் வாக்குரிமையை காக்கக்கூடிய பணியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஈடுபட வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை தமிழக முதல்வர்… இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் என அனைவரும் அனைத்தையும் எதிர்கொள்வதற்கான ஆற்றல் படைத்தவர்கள் என முதல்வர் கூறியுள்ளார். நாங்கள் மட்டுமல்ல பத்திரிக்கை ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் வாக்குகளாக இருந்தாலும் யாரும் ஏமார்ந்து விடாத வண்ணம் அதை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என்றார். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 125 தொகுதிகள் கேட்கும் எனக் கூறியுள்ளார்களே எனக் கேட்டபோது….. ஓவ்வொருவரும் அவர்கள் இயக்கம் சார்ந்து அதை முடிவு செய்ய வேண்டியது அந்தந்த தலைவர்கள் தான் இது சார்ந்து நான் கருத்து கூற முடியாது என்றார்.
