தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 49 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள், 5 வார்டுகளில் காங்கிரஸ், 3 வார்டுகளில் அதிமுக, மதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 இடங்களிலும் , அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி 65 வார்டு வேட்பாளர்களும் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை மேயர் மற்றும் துணை மேயர் கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டி இன்றி திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகனும் துணை மேயராக திவ்யா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றுள்ள மேயர் அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அசாருதீன், இம்ரான், சம்சுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து. மேலும் திருச்சி மாநகராட்சி வளர்ச்சியில் எப்போதும் மனிதநேய மக்கள் கட்சியினர் உடன் இருப்பார்கள் என தெரிவித்தனர்.