தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் முடிகாணிக்கை செலுத்த இனி கட்டணம் இல்லை என்றும் இதற்கான கட்டணத்தை அந்த பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு கோவில் நிர்வாகமே செலுத்தும் என்றும்
அதே போல் கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணம் இல்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
பழனி, திருச்செந்தூர், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் உள்பட பல கோவில்களில் மொட்டை அடிப்பதற்கு என பெரும் கட்டணம் வசூலிக்க பட்டு வரும் நிலையில் இனி பக்தர்கள் எந்தவித கட்டணமும் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலை துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்த அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு, அம்மா மண்டபம் காவிரி ஆறு படித்துறை, கொள்ளிடம் படித்துறையில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த இனி கட்டணம் கிடையாது என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.