திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக மாணவரணி சார்பில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்றது.

இந்த பொதுகூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் கழக செய்தி தொடர்பாளர் ஆவடிக்குமார் கழக இளம் பேச்சாளர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

முன்னதாக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு கழக நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாபன், வனிதா மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
