சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 75வது பிறந்த நாள் மற்றும் தமிழ் திரை உலகில் ரஜினியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராகவேந்திரா கோவிலில் திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அவர் நீடூடி வாழ வேண்டும் என தங்க தேர் இழுத்து வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ரஜினி ரசிகர்கள் இது குறித்து கூறும்போது

ரஜினிகாந்த் நீடூடி வாழ வேண்டும் எனவும் திரையுலகில் அவரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டும் இன்று தங்கத்தேர் இழுக்கப்பட்டது 47வது ஆண்டாக தொடர்ந்து ராகவேந்திரா கோவிலில் தேர் இழுத்து வருகிறோம். தலைவர் ரசிகர்களை சந்திக்க வேண்டும் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் கலீல், எஸ்.கர்ணன் , எஸ்.டி.ராஜ், ஆர். பாலன், ராயல் ராஜீ நாசர், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுதர்சன் செய்திருந்தார்.
