இந்தியா முழுவதும் 73வது குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள டி.ஆர்.எம். அலுவலக வளாகத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மண்டல துணை மேலாளர் மணிஷ்அகர்வால் தேசியக் கொடியை ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை நடந்தது.
மேலும் சிறப்பான முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த நாய்கள் மேக்ஸ் , ராக்கி மற்றும் ஸ்சாடோ ஆகிய மூன்று நாய்களும் சாகசங்கள் செய்து காட்டி அனைவரையும் அசத்தியது.
ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மோப்ப பிரிவை சேர்ந்த நாய்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
வளையம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் வண்ண பலூன்களை கவ்வி பிடித்தல் போன்ற சாகசங்களை செய்து காட்டியது.
ரயில் நிலையத்தில் வெடி பொருட்களை மறைத்து வைத்துக் கொண்டு வரும் தீவிரவாதியை கண்டுபிடிப்பது.
நெருப்பு வளையத்தை தாண்டி சாகசங்களை செய்து காட்டியது.
தரையில் நட்டு வைக்கப்பட்டிருந்த கம்பிகளின் வழியாக வேகமாக ஓடி வருவது போன்ற சாகசங்களை செய்து காட்டியது.
நிகழ்வில் திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி சின்னதுரை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் காவலர்கள் கலந்து கொண்டனர்.