ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  மற்றும்  ரயில் மறியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அதில் முக்கியமாக சாலை மறியல் போராட்டம், தபால் அட்டை அனுப்பும் போராட்டம்,  ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் என தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் திருச்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக அறவழியில் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள், கோட்ட வார்டு தலைவர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள், கட்சியின் முன்னணி தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட காஸ்கிரஸ் கமிட்டி சார்பாக தெப்பகுளம் தலைமை தபால் நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட தலைவர் ஜவகர் பேசியது… ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன் ,அவருக்கான அலுவலகத்தை பறித்து அவரை, பாரதிய ஜனதா கட்சி நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால் சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாகவும், மக்கள் மன்றம் வாயிலாக நாங்கள் இதனை வெல்வோம் என்றார்.  சர்வாதிகாரப் போக்கினை கையில் எடுத்துக்கொண்டு பாஜக தொடர்ந்து ராகுல் காந்திக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பயப்பட போவதில்லை. குறிப்பாக ராகுல் காந்தியை விடுதலை செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.  மேலும் திடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *