நவீன அறிவியல் தொழில்நுட்பம், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் துறைகளில் நாடு உச்சம் தொட அடித்தளமிட்ட முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான. ரெக்ஸ் தலைமையில்
மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, பாராளுமன்ற பொறுப்பாளர் பெனட் அந்தோணிராஜ், மாவட்ட பொருளாளர் முரளி, ஜங்ஷன் பகுதி கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் புதிய வார்டு நிர்வாகிகளுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர்கள் பட்டேல், பூக்கடை பண்ணீர், சத்தியநாதன், அன்பு ஆறுமுகம், கோட்ட தலைவர்கள் சுப்பிரமணியபுரம் கோட்ட தலைவர் எட்வின், காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர், மலைக்கோட்டை கோட்ட தலைவர் வெங்கடேஷ் காந்தி, உறையூர் கோட்ட தலைவர் பாக்யராஜ், புத்தூர் கோட்ட தலைவர் மலர் வெங்கடேஷ், அணி தலைவர்கள் விவசாய பிரிவு அண்ணாதுரை, மகிளா காங்கிரஸ் அஞ்சு, எஸ்சி பிரிவு காளியபெருமாள், சிறும்பான்மை பிரிவு மொய்தின், இந்திரா தோழி மாரீஸ்வரி, ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், முன்னாள் ராணுவ பிரிவு சுவாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.