ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஊழலை மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற தலைப்பை முன்னிறுத்தி திருச்சியில் சுங்கத்துறை அலுவலர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றம் வரை இப்பேரணி நடைபெற்றது.
இதில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம், லஞ்சம் வாங்குவதும் குற்றம், அரசு அலுவலர்கள் அவர்களுடைய கடமையை செய்து கொடுக்க லஞ்சம் வாங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.