திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டம் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பிப்.24, பிப்.25 ஆகிய 2 நாட்கள் நீதிமன்ற பணியிலிருந்து விலகி திருச்சி நீதிமன்ற நுழைவாயில் முன்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது எனவும். அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.25ம் தேதி) திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று லால்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீதிமன்ற கட்டிடத்துக்கு இடம் வழங்குவது தொடர்பாக கோரிக்கை மனு அளிப்பது’ என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் வழங்க கோரி நீதிமன்றம் முன்பு இன்று காலை திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் , திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம், லால்குடி, மணப்பாறை, முசிறி வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் இன்று திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன், செயலாளர் முத்துமாரி ஆகியோர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பின்வி வெங்கட் , திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் வடிவேல் ,பொருளாளர் சதீஷ்குமார் , இணை செயலாளர் விக்னேஷ் குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார் பிரபு பொருளாளர் கிஷோர். மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
