திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெரியவர் சிலி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரமானது அனைத்து வீதிகளிலும் வலம் வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது இன்று மாலை நடைபெற்றது. தேரில் புனித அடைக்கல அன்னை சுரூபம் தாங்கிய தேரானது முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்டு இழுக்கப்பட்டது. இத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித ஆரோக்கிய அன்னையினை வழிபட்டனர்.