திருச்சியில் லுத்துரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவராக துரைசாமி,
மாநில பொது செயலாளராக ஜோயல் ஆனந்த்,மாநில பொருளாளர் ஸ்டாலின் ஜோசப், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் தமிழரசன், மாநில துணைச் செயலாளர் ஜோஸ்வா ஜெயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
நடந்து முடிந்த லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்தல் அதிகாரியாக முனைவர். பேராயர். ஜான் ராஜ்குமார், கிச்சாலி மரம் ஆசிரியர் சுகுமார் சிங் ஆகியோர் சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்த செயல் வீரர் கூட்டத்தில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.