சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் செயலாளர் இக்பால் துணைத் தலைவர் எகியா,துணைச் செயலாளர் கோபி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காந்தி, ஷரீஃப், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
.