சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு தேர்தல் சட்ட திருத்த அமைப்பாளர் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர் ராஜேந்திரன் மற்றும் தலைவர் டாக்டர் செந்தில்நாதன் பிள்ளை ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் நிர்வாகி மாணிக்கவாசகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.