நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வக்பு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேறியது. இதனை கண்டித்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், மற்றும் பல்வேறு ஆதரவு அமைப்புகள், கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் ஆணைக்கு இணங்க இன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து வக்பு வாரிய திருத்த சட்டத்தை மீண்டும் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ், சக்திஅற்றலரசு, முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும், ஒன்றிய பாஜக அரசின் பெரும்பான்மைவாத பாசிசத்தை கண்டித்தும், மக்கள விரோத போக்கை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மாநில நிர்வாகிகள் அரசு, புரோஸ்கான், அஷ்ரப்அலி, பெல் சந்திரசேகரன், மற்றும் வேல்முருகன், நூர்முகமது, சௌகத்அலி, அப்பாஸ், அசன், விஜயகுமார், மாரியம்மாள், வழக்கறிஞர்கள் பழனியப்பன், ரகு, ஞானம், ஜெனிவாலிசி, மகாலட்சுமி, சசிகலா, விடுதலைஇன்பன், மரியகமல், ஏகலைவன், விஜயகுமார், கா.கமல், தேவி, இளையராஜா, வெற்றிஅழகன், மொழி சிவா, ரஞ்சித், அழகுமணி உட்பட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.