நல்லோர் வட்டம் சார்பில் கலாம் 4-ம் ஆண்டு விழா வருகிற அக்டோபர் 15ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது இதுகுறித்து நல்லோர் வட்டம் விழா பொறுப்பாளர் நவிலு சுப்ரமணியன் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நல்லோர் வட்டம் சார்பில் கலாம் 4-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டின் எதிர்காலத்தை வளமானதாகவும் வலிமையானதாகவும் ஆக்கும் சக்தி படைத்த ஆயிரம் இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 15ஆம் தேதி திருவெரும்பூர் பகுதியில் உள்ள கிரான்ட் எம்பயர் கன்வெர்ஷன் ஹாலில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காந்தி கிராம பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்தியாவை மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிறந்த தினம் அக்டோபர் 15 ஆம் தேதி அன்று இந்த சந்திப்பு விழா நடைபெற உள்ளது . கடந்த 23 ஆண்டுகளாக மாணவர்களை எதிர்கால தலைவர்களாக உருவாக்க மாணிக்க மாணவர்கள் திட்டம், அரசு பள்ளிகளை மேம்படுத்த, கல்வி கோவில் விருது லட்சிய ஆசிரியர் விருது ஆகியவர்களை வழங்கி வருகிறது. அதேபோல் கிராம சபை விழிப்புணர்வு, கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளித்து ஒருங்கிணைத்தல், அரசு நலத்திட்டங்களை மக்களை அறிய செய்தல் போன்ற செயல்களை தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது‌.

இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளை சார்ந்த பிரமுகர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் இந்த சந்திப்பில் நல்லோர் வட்டத்தின் மாநில வழிகாட்டி திருச்சி நவிலு சுப்பிரமணியன், அன்பு, மாநில பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், கிராம களம் பொறுப்பாளர் ஸ்ரீதர், மாணவர் கள பொறுப்பாளர் கௌதம் மற்றும் நாகராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்