கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் விலை நிர்ணயம், சம்பா சாகுபடியை முழுமையாக முடித்து பயிர் அறுவடைக்கு உதவும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரியான முருகேஷை வேளாண் அதிகாரியாக நியமிக்க கூடாது. தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7500 இழப்பீடு வழங்க வேண்டும். நீர் நிலைகளை நிறுவனங்கள் அபகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு முன்னதாக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு ஆகியோர் தலைமையில், மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து ஊர்வலமாக வந்த 200 க்கு மேற்பட்ட விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கர் அளவில் சாகுபடி நடந்தது. 5 லட்சம் ஏக்கர் அறுவடை துவங்கி உள்ளது. 10 லட்சம் ஏக்கர் தண்ணி கேட்டு தமிழக அரசிடம் முறையிட்டோம்.

ஆனால் தனியார் ஆலைகளுக்கு தண்ணீரை தேக்கி வைத்துள்ளது தமிழக அரசு. மேட்டூரை தமிழ்நாடு அரசு திறக்க வைப்பதற்கு விவசாயிகள் ஒன்றிணைந்து அணைக்கு சென்று போராடுவோம். விவசாயிகள் மீது தொடர்ந்து வழக்குகளை போடும் திமுக அரசை கண்டிப்பதோடு வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்க்கு எதிராக களம் இறங்குவோம். நெல்,கரும்புக்கு உரிய விலை கொடுக்கிறோம் என உத்தரவாதம் அளித்து கொடுக்கவில்லை தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் தனிநபர் காப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கைள் நிறைவேற்ற வில்லையனில் அடுத்த மாதம் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்