திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஜோசப் கல்லூரி மைதானத்தில் *எங்கள் முதல்வர் எங்கள் பெருமை* என்கிற தலைப்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது – இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார் – இந்நிகழ்ச்சியில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் :

 

தலைவரின் வரலாற்றை சொல்லகூடிய இந்த கண்காட்சி சென்னை,மதுரை,கோவையை தாண்டி தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது. 50 வருட உழைப்பை இந்த கண்காட்சியில் பார்க்கலாம் – ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்களில் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறது. 1 லட்சம் மக்கள் பார்த்து உள்ளனர் இந்த கண்காட்சியை. காங்கிரஸ் கொண்டு வந்த மீசா சட்டத்திற்கும் – மத்திய பாஜக அரசு தற்போது நடத்தும் வருமான வரி துறை சோதனைக்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா என்கிற கேள்விக்கு ? வேறுபாடுகள் ஏதும் இல்லை – வருமானவரித்துறை சோதனை போன்ற எந்த சவாலாக இருந்தாலும் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக 31 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம் – விரைவில் அதற்கான பணிகள் துவங்கும்.

சேலத்தில் ஒரு கிராமத்தில் சிறப்பாக விளையாட்டு அரங்கம் செயல்படுத்தி உள்ளனர் – இதை மாதிரியாக வைத்து எல்லா ஊராட்சிகளிலும் கொண்டு வரும் திட்டம் உள்ளது. சட்டப்பேரவை முடிந்து ஏறத்தாழ ஒரு வாரம் மட்டுமே ஆகிறது படிப்படியாக எனது பணிகளை துவங்க உள்ளேன்.தமிழக அமைச்சரவை இலாகாக்கள் மாற்றப்படுவதாக தகவல் வருகிறது குறிப்பாக நீங்கள் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது என்கிற கேள்விக்கு ? யார் கூறினார்கள் – எங்கிருந்து தகவல்கள் வந்தது என கேள்வியுடன் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *