தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் நிகழ்ச்சி ஸ்ரீரங்கம் வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட தொழில் குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அருகில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ் உடன் இருந்தார் இந்தத் திட்டத்தின் நோக்கம் ஊரகப் பகுதியில் வாழும் மக்கள் வாழ்க்கையில் நிலையான வருமானத்தை ஏற்படுத்தவும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் பெண்களை முன்னிலைப்படுத்திய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன.
இந்த வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது உலக வங்கி உதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தகத் திட்டம், மூன்றாம் தலைமுறை வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார அதிகாரம் அளிக்கும் திட்டம் என்ற அடிப்படையில் தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் உள்ள 3,994 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக வங்கிக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிதி பகிர்வு என்ற விகிதத்தில் இத்திட்டத்திற்கு 910.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரகத் தொழில் முனைவுகளை உருவாக்குதல் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் என்ற அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் மணப்பாறை மணிகண்டம் முசிறி மற்றும் துறையூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் 135 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.