திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது…. திருச்சி புதிய விமான நிலையத்திற்கு வந்து இறங்கி அதை பார்ப்பதில் சந்தோஷமாக இருக்கிறது. விஜய் வழக்கு சி பி ஐ க்கு மாற்றி இருப்பது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் நிற்பேனா என்பது எனக்கே தெரியாது. விஜயகாந்த் மகனுடன் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மிகவும் நன்றாக நடிக்கிறார் அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, விஜயகாந்த் சாருடன் சேர்ந்து நடித்தது போல் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை இருமல் மருந்து விவகாரத்தில் ஏற்கனவே அந்நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர் நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பார்கள். இருமல் மருதினால் தான் இறந்தார்கள் என உறுதியாக சொல்லப்படும் நிலையில் இருமல் மருந்து நிறுவனம் தடை செய்யப்பட்டுள்ளது என்ன நடக்கிறது என பார்ப்போம். தமிழக அரசு எத்தனை சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என ஏற்கனவே பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நான் கூறினால் சரியாக எத்தனை சதவீதம் என கூற வேண்டும். எங்கள் மாநிலத் தலைவர் எத்தனை சதவீதம் எனக் கூறியுள்ளாரோ அதையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது இந்த கருத்துகளை எல்லாம் சிறப்பாக எடுத்துச் சொல்லுவேன். அடுத்த வருடம் உதயநிதி சினிமாவில் நடிப்பாரா என கேட்டபோது…. அது எனக்கு தெரியாது நான் என்ன ஜாதகக்காரனா, விஞ்ஞானியா என்றார். தேர்தல் வரும் என்பது அனைவருக்கும் தெரியும் , மக்கள் அதை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தேர்தலில் என்ன நடக்கும் எதற்காக வாக்களிக்க வேண்டும் எப்படி வாக்களிக்க வேண்டும் யாருக்காக வாக்களிக்க வேண்டும் என சிந்திக்க ஆரம்பித்து விடுவர். தொடர்ந்து சென்று வாக்களிப்பவர்கள் இதை சிந்திப்பார். ஆட்சிகள் மாற வேண்டும் காட்சிகள் மாற வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் டீக்கடை முதல் சந்திக்கும் அனைத்து இடங்களிலும் இது குறித்து பேசுவர். தேர்தல் வரும் போது என்ன நடக்கும் என்பது அன்று தான் தெரியும் தமிழக வெற்றி கழகம் பிஜேபி கூட்டணியில் வந்துவிடுமா என கேட்டபோது நான் மாநிலத் தலைவர் கிடையாது , டெல்லி அதிகாரத்திலும் இல்லை என்றார் . திருமாவளவன் அரசியலை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார் எனக் கேட்டபோது ….. அவர் சொன்ன காரணம் எனக்கு தெரியாது நான் வெளிநாட்டில் இருந்து வந்த பின் இவ்வளவு கேள்விகள் கேட்டால் நான் பதில் சொல்ல காத்திருக்கிறேன் இருந்தாலும் அவர் வெளியே போக வேண்டும் என சொன்னதற்கான காரணம் எனக்கு தெரியாது அந்த விபத்தை காரணம் காட்டி அவர் சொல்லி இருக்கலாம்.
புதுக்கோட்டையில் திருமாவளவன் தன் கட்சி கூட்டத்தில் கட்சிக்காரரை தாக்கினார் என்றால் அது ஒரு ஆசிரியர் மாணவனை கண்டித்தது போல் எடுத்துக் கொள்ளலாம். உலக அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. காலையில் பல் துலக்க செல்கிறார்களோ இல்லையோ மொபைல் போனை எடுத்துக் கொண்டு செல்கின்றனர். பலர் சமூக வலைதளங்களில் இருக்கின்றனர் இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் நடக்கின்றன மக்கள் ஏமாற தயாராக இருக்கின்றனர் அதனால் ஏமாற்றுபவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். அதனால் சைபர் கிரைம் குற்றங்களும் அதிக அளவில் நடந்து வருகிறது. வேறு ஏதும் கேள்வி இருக்கிறதா என அவர் கேட்ட போது நீங்கள் தான் எதற்கும் சரியாக பதில் அளிக்க மாட்டேன் என்கிறீர்களே என நிருபர்கள் கூறினார்…. அதற்கு நீங்க கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் காத்திருக்கிறேன் இது போல் நீங்கள் ஒவ்வொருத்தரையும் கேட்டால் நான் சந்தோஷமாக இருப்பேன் வேகமாக செல்பவர்களை நீங்கள் கேள்வியே கேட்க மாட்டேன் என்கிறீர்கள் என்றார்.