வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளிக்கையில் கூறியதாவது:- அதிமுக ஆட்சிக்கு வராது என்கிற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவரின் அறிவிப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. விஜய் அவருக்கு எழுதி கொடுப்பதை வாசிக்கிறார். கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்ககின் கொள்கை, கோட்பாடுகள் குறித்து விஜய் அவரின் தொண்டர்களுக்கு விளக்கவில்லை. விஜய்யின் ஒரே அஜெண்டா திமுக எதிர்ப்பு மட்டும் தான்.

ஓ.பி.எஸ் மிகவும் பொறுமைசாலி, அவர் சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்கும் பக்குவம் கொண்டவர் அவர் திமுகவில் இணைந்தால் அதை நான் வரவேற்பேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கிட்டால் எந்த சிக்கலும் இயலாது எங்கள் கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும். கூட்டணியில் எந்த சிக்கலும் வராத வகையில் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு கடமை.
