விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் பள்ளிகளில் ப்ரீகேஜி, எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் LKG, UKG, 1-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இன்று 10 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளன. இன்று சேரும் மாணவ, மாணவிகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் அகரம் சொல்லித் தரும் நிகழ்வு நடைப்பெற்றது. மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து பள்ளி சீருடை வழங்கி மேலத்தாலத்துடன் உற்சாக வரவேற்பாதித்தனர் அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் முத்து செல்வம் மாணவ மாணவிகளுக்கு நெல்மணியில் வித்யாரம்பம் எழுத கற்றுக் கொடுத்தார்.