திருச்சியில் பிரசித்திபெற்ற மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 5மணிக்கு நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு 50கிலோ பச்சரிசி, 50கிலோ உருண்டை வெல்லம், 2கிலோ எள், 1கிலோ ஏலக்காய் மற்றும் சாதிக்காய், 6கிலோ நெய், 100தேங்காய் உள்ளிட்டவைகளைக் கொண்டு தலா 75கிலோ எடையில் 150கிலோ எடையுள்ள இரண்டு கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டு, சிவாச்சார்யர்களால் மேளதாளங்கள் முழங்க தொட்டிலில் வைத்து ஒரு 75 கொழுக்கட்டை மலை உச்சியில் இருக்கும் பிள்ளையாருக்கு கொண்டுவரப்பட்டது,
அதே போல மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ படைக்கப்பட்டது. பின்னர் விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் கொழுக்கட்டையானது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து பெரும் திரளான பக்தர்கள் வருகை தந்து விநாயகரை வழிபட்டுச் சென்றனர்.