மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347-வது சதய விழாவையொட்டி திருச்சி வடக்கு மாவட்டம் திமுக அயலக அணி மற்றும் மாரியம்மன் விளையாட்டுக் குழு இணைந்து திருச்சி சமயபுரம் கல்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் திடலில் மாபெரும் கபாடி திருவிழா இன்று நடைபெற்றது.
இந்த கபாடி விளையாட்டு போட்டியை தமிழக விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன் கபாடி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் இந்த கபாடி என்பது தமிழன் உருவாக்கியது தமிழர்களுக்கு சொந்தமானது தமிழன் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் ஐந்தே ஐந்து கோடுகளை கொண்டு இந்த கபடி போட்டியை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த கபடி போட்டி உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. மேலும் கோ-கோ விளையாட்டு போட்டி மற்றும் எதிரிகளை எந்த ஒரு ஆயுதமும் இன்றி ஒரே ஒரு குச்சி யான சிலம்பக்கலை மூலம் எதிரிகளை களம் காணும் தமிழன் அறிவு ஆற்றல் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழக முதல்வர் இளைஞர்கள் வெற்றி பெற்று பரிசு தொகை மற்றும் உறுதியான வேலைவாய்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி தந்துள்ளார் மேலும் சிலம்பக் கலையை கற்ற வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்துள்ளார். மேலும் வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் வரை சென்னையில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் ஜூன் 19ஆம் தேதி டெல்லியில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து அதன் பயணத்தை தொடங்கி வைக்கிறார். இந்த ஒலிம்பிக் தீபம் ஆனது பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஜூலை 28ஆம் தேதி சென்னைக்கு வருகிறது. என தெரிவித்தார். முன்னதாக கல்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்தப் கபாடி திருவிழா போட்டியில் கொணலை ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா வரவேற்புரை ஆற்றிட, திமுக அயலக அணி திருச்சி வடக்கு மாவட்ட மணிகண்டன், தமிழர் தேசியம் கட்சி நிஷாந்த், ஒன்றிய கவுன்சிலர் ருக்கியா ஒலி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திமுக அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல் ராமசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பேட்டரிக் ராஜ்குமார், தொழிலதிபர் ரூபன், இருவத்தி நாலாவது வார்டு உறுப்பினர் சோபியா விமலா ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கபாடி போட்டியில் வெற்றி பெரும் கபாடி வீரர்களுக்கு முதல் பரிசாக சுழல் கோப்பையுடன் ரூபாய் 25099/-, இரண்டாம் பரிசாக ரூபாய் 20099/-, மூன்றாம் பரிசாக ரூபாய் 15, 099/-, நான்காம் பரிசாக 10099/-, ஐந்தாம் பரிசாக ரூபாய் 7099/- மேலும் பல பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.