மத்திய அரசை கண்டித்து விவசாய அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில் திருச்சி விவசாயிகள் போராட்டத்திற்கு ஈடுபட முயன்ற போது திருச்சி காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்தனர்.மேலும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில் திருச்சி விவசாயிகள் மத்திய அரசு விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வலியுறுத்தியும்,தேசிய மயமாக்கிய வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் ,மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிக்க கூடாது,
கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய தண்ணீரை நியாயமாக பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் செல்லும்போது. அவர்களை மறித்து மலர் சாலையில் உள்ள விவசாயிகள் சங்க தலைமை அலுவலகத்தில் உள்ள இல்லத்தில் விவசாயிகளை வெளியே செல்ல அனுமதிக்காமல் வீட்டு காவலில் வைத்தனர்,காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் அவசர ஆலோசனை கூட்டத்தில் போராட்டத்திற்கு தடை விதிக்கும் காவல்துறையினரை கண்டித்தும், தமிழக அரசே கண்டிக்கும் விதமாக போராட்டத்தை தீவிர படுத்துவதற்கு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.