கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் செயல்படும் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கி வாகனத்தில் நடமாடும் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூட்டுறவு துறையில் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளருக்கு அய்யாகண்ணு அளித்த பேட்டியில்
வறட்சியின் காரணமாக கடன் தள்ளுபடி செய்தனர். அதில் சிறுகுறு விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அதில் நீதிபதிகள் வறட்சி என்பது சிறு குறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல எல்லா விவசாயிகளுக்கும் வறட்சி என்பது பொது எனவே, எல்லா விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அப்போது பெரிய விவசாயிகளான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளவர்களுக்கு குறுகிய கால கடன்களை மத்திய காலகடன்களாக மாற்றினர்கள். 2021ல் அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடி செய்தார்கள். ஆனால் அந்த தள்ளுபடி இதில் வரவில்லை. எங்களைக் கேட்காமலேயே மத்திய கால கடன்களாக அவர்கள் மாற்றினர்.இது குறித்து இன்று திருச்சியில் ஆய்வுக்கு வந்த கூட்டுறவு துறையில் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இது குறித்து மத்திய காலக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளோம்.
இதேபோல் வாழை விவசாயிகளுக்கு வாழைக்கு கடன் தர வேண்டும், அதேபோல வாழை சாய்ந்து போகாதபடி அதற்கு முட்டுக் கொடுக்கும் வகையில் பயன்படுத்தும் மூங்கில் கட்டைக்கும் கடன் வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஆயிரம் மூங்கில் தேவை ஒரு மூங்கில் விலை சுமார் 8o முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வங்கிகளோ ஒரு மூங்கில் பத்து ரூபாய் கடன் தருகிறார்கள். இது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். தற்பொழுது விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடன் கொடுப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கிராம நிர்வாகி அதிகாரி இது குறித்த சான்றுகள் தருவதில்லை. எனவே, விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம் இதுகுறித்து பரிசிலிப்பதாக தெரிவித்துள்ளார் என கூறினார்.