திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வந்தனர். அப்போது இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய ஸ்ரீரங்கம் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இல்லாததால் கோபமடைந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலக சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

 

அப்போது போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சு‌ வார்த்தை நடத்தினார். கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு திருவெறும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்