திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாந்துரை கிராமத்தை வசிப்பவர் ஏகாம்பரம் பிள்ளை. பண்ணையாரான இவருக்கு அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன. இவர்களுக்கு விசாலி என்ற மகள் திருமணமாகி திருச்சி யில் வசித்து் வருகிறார் . இந் நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் ஏகாம்பரம் உயிரிழந்தார் ஏகாம்பரத்துக்கு கமலம் என்ற மனைவியும் விசாலி என்ற மகளும் உள்ளனர் ஏகாம்பரம் மனைவி மட்டும் மாந்துரை வீட்டிலுள்ள தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி திருச்சி அண்ணா நகரில் உள்ள தனது மகள் விசாலினி வீட்டிற்கு சென்றுள்ளார் .
நேற்று இரவு மாந்துரையில் உள்ள விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நெல் கதிர்களை அறுவடை பணிக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கதவினை உடைத்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் இரும்புப் பெட்டிகள் தகர பெட்டிகளில் இருந்த 159 பவுன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி பொருட்கள் ரூபாய் 15 லட்சம் ரொக்கம் மற்றும் பழமையான நாணயங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கமலம் லால்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சீதாராமன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர் .
அதன் பின்னர் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வந்திருந்து ஆய்வு நடத்தினர். அப்போது மோப்ப நாய் மாந்துரை கிராமத்திலிருந்து பம்பரம்சுற்றி கிராமம் செல்லும் வழியில் வந்து நின்றது . இந்த திருட்டு குறித்து லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர் இந்த திருட்டுச் சம்பவம் இதே பகுதியில் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற வங்கி முதுநிலை மேலாளர் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போன அன்று இந்த கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.