திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு. இருந்தது. இந்தப் பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர்கள் பிரபு, இளங்கோ மற்றும் வீரர்கள் விஜய், அருண் பாண்டியன், சுரேஷ், பூமி ராஜன், அசோக் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை .பாம்பை சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

இந்தக் கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பு அவ்வளவு எளிதில் கொல்ல முடியாத பாம்பாகும் இந்த பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தான் வசிக்கும். ஆனால் மக்கள் வசிக்கும் பகுதியில் இவ்வளவு தூரம் இந்த பாம்பு எப்படி இங்கு வந்தது என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த பாம்பு கடித்து விட்டால் உடனடியாக ரத்தம் உறைந்து உயிரிழப்பு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பாம்பை மீட்ட லால்குடி தீயணைப்பு வீரர்கள் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி வனப்பகுதியில் ரத்த மண்டலம் என்ற அரியவகை பாம்பை விடுவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *