வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் வேளாண்மை விளைபொருள் விற்பனை வாரியம் இணைந்து திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 500 விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கான ஒருநாள் ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கு கலையரங்கம், புதிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து, ஏற்றுமதி மேம்பாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சரவணன் பேசினார்.

ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கில் வேளாண்மை இணை இயக்குநர், மாவட் கலக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை, தோட்டக்கலை துணை இயக்குநர், மாவட்ட வளர்ச்சி மேலாளர், நபார்டு வங்கி மற்றும் முன்னோடி வங்கி மேலாளர், திருச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையினை ஆற்றினார்கள்.

வாழை ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த தேசிய வாழை ஆராச்சி மையம் இயக்குநர் டாக்டர் செல்வராஜ், எடுத்துரைத்தார். முனைவர்.என்.வெங்கடாஜலபதி, முதல்வர் (பொ) தஞ்சை இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப முதல்வர் (பொ) வெங்கடாஜலபதி அனைத்து வேளாண் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி குறித்து சிறப்புரை ஆற்றினார்கள் .வேளாண்மை விளை பொருட்களுக்கான, ஏற்றுமதி மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து போராசிரியர் செந்தில்குமார், தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதி மற்றும் நிதிஉதவி திட்டம் குறித்து வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாடு ஆணையத்திலிருந்து சோபனாகுமார், தொழில்நுட்ப உரையாற்றினார்கள். ஏற்றுமதியாளர் சிவராமகிருஷ்ணன் ஏற்றுமதி இடர்பாடு மற்றும் காப்பீடு சார்ந்த தகவல்களையும் திருச்சி மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ் பாபு உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுதல் குறித்தும், விபரச்சீட்டு மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள் பற்றியும், ஏற்றுமதி நடைமுறை ஆவணங்கள் குறித்தும் சதிஸ்குமார் தொழில்நுட்ப உரையாற்றினார்கள்.

தமிழ்நாடு வாழை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மேலாண்மை இயக்குநர் தொட்டியம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களும் சந்தை வாய்ப்புகளும் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார்கள்.புதிய தொழில்முனைவோருக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து டி.ஏ.பி.ஜ. எப் சரவணன், மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சவால்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து மேலாண்மை இயக்குநர் டாக்டர கே.எஸ். கமாலுதீன் ஆகியோர் எடுத்துரைத்தார்கள். ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கில் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை கண்காட்சியில் வைத்ததன் மூலம் ஏற்றுமதி விளைபொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பினை விவசாயிகள் அறிந்து கொண்டதுடன் ஏற்றுமதி தொடர்பாக எழுகின்ற அனைத்து வினாக்களுக்கும் விளக்கம் பெற்று சென்றது இக்கருத்தரங்கின் சிறப்பம்சமாகும். முடிவில் வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) நாகேஷ்வரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *