சென்னை கேகே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்ரி தனியார் பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, ஆபாச படங்கள் இணையதள பக்கங்களை வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்புவது போன்ற செயல்கள் மூலமாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதுகுறித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் குரல் எழுப்பியிருந்தார். அதன்படி, “சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிக ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மாணவர்களிடமிருந்து வரும் புகார்களுக்கு எதிராக செயல்படத் தவறிய பள்ளி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில் பாடகி சின்மயி தனது பிரச்னையை சமூக வலைதளம் மூலம் வெளிட்டு, கனிமொழி எம்பியிடம் கோரிக்கைவிடுத்துள்ளார். மேலும்கனிமொழியின் மேற்கூறிய ட்வீட்டை மேற்கோள் காட்டி, “வைரமுத்து மீதான எனது மற்றும் 16 பெண்களின் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கும் நீங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க உதவி செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உண்மை என்னவென்றால், அண்மைகாலமாக ராதா ரவியும் அவரது குழுவும் என்னை வேலை செய்யவிடாமல் தடுக்கின்றனர். என் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க மாட்டேங்குறது என எனக்கு தெரிகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.