திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள மதர்லேண்ட் ஹோட்டலில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகரும், முக்குலத்தோர் புலிபடை தலைவருமான கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது..,
செய்தியாளர்கள் சந்திப்பில் கருணாஸ் கூறுபோபொழுது..

எங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என அதற்கு போராட்டம் செய்வது தமிழகத்தில் தான் நடைபெறுகிறது எனவும் அது மிக வேதனையான ஒன்று என கூறினார்.
காமராஜ், அண்ணா இதே தமிழகத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்,
யாரையும் குறைத்து எடை போட கூடாது.

நான் தேவர் பேரை சொல்லி அரசியலுக்கு வந்தேன் , என் மீது ஜாதி சாயம் பூசப்படுகுறது, அரசியலை பொறுத்தவரை அங்கு சமுதாயம் வைத்து நான் யாரையும் பார்த்ததில்லை.
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பதவியேற்றதும் அவரிடம் அனுமதி பெற்று கண்டிப்பாக அவரை நேரில் சந்திப்பேன் என கூறினார்.