திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அரங்கனின் தரிசனம் செய்தார் அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் அவருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கோசாலையை பார்வையிட்டஅங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாடுகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.பின்னர் அப்பகுதியில் இருக்கும் நெல் கொட்டாரத்தை பார்வையிட்டார்.தொடர்ந்து தன்வந்திரி சன்னதி தாயார் சன்னதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்குபேட்டியளித்த அவர்இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற கடந்த பத்தாண்டில் கேட்பாரற்று, பராமரிக்கப்படாமல் உள்ள கோயில்களில் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்ததால்குடமுழுக்கும், எந்த புனரமைப்புப் பணிகளும் திருக்கோவில்களில் நடைபெற்றவில்லை.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, பகுதி செயலாளர் ராம்குமார் ஒன்றிய செயலாளர் மல்லியம்பத்து கதிர்வேல் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.