108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 5:30 மணி முதல் காலை 6:15 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விழாவின் இரண்டாம் நாள் மாலை கற்பசுவிருஷ வாகனத்திலும், 30-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலையாளி வாகனத்திலும், 1-ந்தேதி காலை இரட்டைபிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 2-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமான் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தார் . மேலும் 4-ந்தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 5-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 5:45 மணி அளவில் நம் பெருமால் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சித்திரை வீதியில் உள்ள தேரில் எழுந்தருளி உப நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரை படம் பிடித்து இழுத்துச் சென்றனர்.