108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ரொக்கம்,தங்கம்,வெள்ளி என காணிக்கையாக உண்டியல்களில் செலுத்துகின்றனர். கோயில் உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படும் .அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல்கள் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கோயில் பணியாளர்கள் ,சமூக ஆர்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் 93 லட்சத்து 22 ஆயிரத்து 577 ரூபாய் ரொக்கமாகவும்,143 கிராம் தங்கமாகவும்,2431 கிராம் வெள்ளியாகவும் மற்றும் அயல் நாட்டு பணம் 85 என பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.