ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று காலை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு ரூபாய் 77,38,183 , தங்கம் 216.6 கிராம் , வெள்ளி 1870.900 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 261 காணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
இந்த காணிக்கை என்னும் பணியில் திருவானைக்கோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் உதவி ஆணையர் இரவிச்சந்திரன் ,கோயில் மேலாளர் .தமிழ்செல்வி கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், கோபாலகிருஷ்ணன், சரண்யா, மீனாட்சி, வெங்கடேசன், துணை மேலாளர் சண்முகவடி ,ஆய்வாளர்கள் மங்கையர்கரசி, பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வர்களால் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிட்டனர்.