இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். சென்னைக்கு வந்த அவர், நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நேற்று இரவு சென்னை கிண் டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை சென்னையில் இருந்து. தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் ஜனாதிபதி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக் குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அங்கு நடைபெ றும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்..
விழா முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டிருந்த எலி பேட் வலைதளத்தில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டு சென்றார் முன்னதாக ஸ்ரீரங்கம் வந்த ஜனாதிபதியை கவர்னர் ஆர் என் ரவி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சரவணன் போலீஸ் கமிஷனர் காமினி. மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.