தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் முதலுதவி மருத்துவ மையத்தினை மையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்து மருத்துவர்கள் , 2 செவிலியர்கள் மற்றும் 2 பல்நோக்குப் பணியாளர்கள் என 6 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர் .. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும் அவர்களுக்கு நலக்குறைவு உடல் ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக சிகிச்சை அளித்திடவும் , இக்கோவிலில் சந்திர புஷ்கரணி குளத்தின் அருகில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்த முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது . இம்மையம் தினசரி காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் . இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, மேயர் அன்பழகன், பழனியாண்டி , இந்து சமய சட்டமன்ற உறுப்பினர் அறநிலையத்துறை இணை ஆணையர் உதவி ஆணையர் கந்தசாமி , மண்டலக் குழுத் தலைவர் செல்வராஜ் , ஆண்டாள் இராம்குமார் , முக்கியப் பிரமுகர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்