தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் வயது 67.இவரது மனைவி செண்பகவல்லி வயது 65.இருவரும் தனது 42 வயது மகள் 37வது மகள் ஆகிய இருவருடன் கடந்த பத்தாம் தேதி திருவரங்கம் யாத்திரி நிவாஸில் வந்து தங்கியுள்ளனர். கடந்த நான்கு நாட்களாக வெளியே வரவில்லை அரை பூட்டப்பட்டு இருந்தது இன்று காலையில் துர்நாற்றம் வீசியதையடுத்து ஊழியர்கள் சந்தேகத்தின் பெயரில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

 போலீஸ் வந்ததும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது 4 பேரும் உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு திருவரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப வறுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக நான்கு பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *